பணவீக்கம் அதிகரிப்பு-தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்!

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையில் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளது

அதேநேரம், உணவு பணவீக்கம், கடந்த நவம்பரில் மறை 2.2 சதவீமாக காணப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் 1.6 சதவீமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!