யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டங்களைப் பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று மாலை
இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்தப் போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
நாளை சனிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக அனைவரையும் ஒன்றுகூடுமாறு அந்தக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
