மின்சாரசபை தொழிற்சங்கங்கள் திடீர் புறக்கணிப்பு!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் 3 மணி முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றும் செயல்முறையின் போது, ஊழியர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாமை இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18(ஈ) பிரிவின் கீழ், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையான கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிடப்பட வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் வேதன மற்றும் ஏனைய சலுகைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதுடன், அவை தொடர்பான சட்ட ரீதியான உறுதிப்பாடுகள் வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!