அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று 25ஆம் திகதி காலை 7.15 மணியளவில் சேருநுவர, மகிந்தபுர சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் சுமார் 21 பயணிகள் பயணித்துள்ள நிலையில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலை மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
