இன்று முதல் கடைகளில் பொலிதீன் பைகளுக்கு பணம் அறவீடு!

கைப்பிடிகளுடன் கூடிய பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கமைய, இனிவரும் காலங்களில் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது,  கைப்பிடி கொண்ட பொலிதீன் பைகளுக்கு ஒரு விலையை அறவிட வேண்டும்.

பொலிதீன் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்குடன், பொலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம்,  இனிமேல் வர்த்தக நிலையங்களில் பொலிதீன் பைகள் இலவசமாக வழங்கப்படாது எனத் அறிவுத்துள்ளார்.

மேலும்,நவம்பர் முதலாம் திகதி முதல் ‘சிலி சிலி’ பைகளை இலவசமாக வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வர்த்தக நிலையங்களால் பொலிதீன் பைகள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது.” “சூழலைப் பாதுகாப்பதற்குப் பங்களிப்பது பாவனையாளரின் கடமையாகும். ஒரு கடைக்கு பொருட்களை வாங்கச் செல்லும் போது, அதற்கு பொருத்தமான பையை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!