ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று 30ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 40 வயதுடைய மொறவின்ன, பாணந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
