வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று 31 ஆம்  திகதி காலை 8.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் வைத்து இக் கைது இடம்பெற்றுள்ளது.

அந்த கூட்டுத்தாபனத்திற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், 2015 ஆம் ஆண்டில் 50 தற்காலிக களஞ்சியசாலைகளுக்கான கொட்டகைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் வெளித்தரப்பினருக்கு அதே தொகைக்குச் சமமான இலாபத்தை வழங்கிய குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!