பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) மொரடுவை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் காயப்படுத்திய குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹெரோயினுடன் நேற்று 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிக்குராண பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், கடந்த ஜூலை 11ஆம் திகதி ஹிரண பிரதேசத்தில் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியமை மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்யும் போது, அவரிடமிருந்து 13 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய ஹிக்குராண பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, தமன மற்றும் ஹிரண பொலிஸ் நிலையங்களும், பாணந்துறைப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
