‘உடரட்ட மெனிகே’ புகையிரதம் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது

இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று 20ஆம் திகதி முற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப பயணத்தை குறிக்கும் வகையில், இன்று காலை 8.00 மணிக்கு ‘Class S14’ வலுச்சக்தி தொகுதியைக் கொண்ட பதுளை – அம்பேவெல விசேட ‘உடரட்ட மெனிகே’ புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

‘டித்வா’ புயல் ஏற்பட்டு 23 நாட்களுக்குப் பின்னரே மலையக பாதையில்  புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.

இதன்படி, இன்று முதல் மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை – அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!