இலஞ்சம் வாங்கிய பொலீஸ் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலீஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
நீர்கொழும்பு பகுதியில் காணாமல் போன வாகனம் ஒன்றைக் கண்டுபிடித்து சட்ட ரீதியாக – நீதிமன்றத்தினூடாக விடுவித்ததற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 2 இலட்டத்து 70 ஆயிரம் பெறுமதியான குளிரூட்டி ஒன்றை இலஞ்சமாகக் கேட்டு, அதற்கான பணத்தை குளிரூட்டி விற்பனைக் காட்சியகத்தின் முகாமையாளரது தனியார் வங்கிக் கணக்கொன்றுக்கு வைப்பிலிடுமாறு கேட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை உறுதி செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பணம் வைப்பிலிடப்பட்டதை உறுதி செய்ததுடன், சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.