யாழ் போதனா வைத்தியசாலையில் அதிர்ச்சி : வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மூச்செடுக்க சிரெமென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே நேற்று மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தீடிரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதிகளவிலான மதுபான பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட குறித்த நபரின் உடலில் ஏற்றப்பட்ட கனூலா கழற்றப்பட்டநிலையில் இரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!