பொலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பிய சந்தேக நபர் : மீண்டும் யாழ். வந்த போது விமான நிலையத்தில் வைத்துக் கைது!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்த ஒருவர் பலாலி விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய ஒருவர் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த தேவா, பிரசன்னா ஆகியோரின் சகாக்களில் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலமையிலான குழுவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய சந்தேக நபர் என்றும், அவர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!