வேகமாகப் பரவி வரும் ‘டீனியா’: பொது மக்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது டினியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாகப்  பரவி வருவதாக வைத்தியர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நோயின் பிரதான அறிகுறியாக  உடலில்  அரிப்பு, சிவப்பு புள்ளிகள் என்பன  ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்நோய் தொற்றானது  தோல் சுருங்கும் இடங்களிலும் வியர்வை அதிகளவில் சேரும் இடங்களிலும் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அக்குள், பாதங்கள் மற்றும் தலையில்  இத்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  சருமத்தை தூய்மையாக வைத்திருத்தல், தூய்மையான மற்றும் தளர்வான ஆடைகளை அணிதல்  போன்றவற்றின் மூலம் குறித்த  நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என விசேட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்நோயினை  சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும்  எனவும், இந்நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறும்  அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!