103 மியன்மார் அகதிகளுடன் வந்த படகு முல்லைத்தீவில் கடற்படையினரால் மீட்பு!

இலங்கைக் கடல் எல்லையினுள் – முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்குக் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய நாட்டுப் படகு ஒன்றில் இருந்து 103 வியற்நாம் அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு , முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் பெருமளவு ஆட்களுடன் படகொன்று கரை ஒதுங்குவதை அவதானித்த கடற்படையினர், அதனைப் பரிசோதனை செய்யும் நோக்குடன் மேலதிக படையைச் சம்பவ இடத்துக்கு அனுப்பி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, படகில் வந்தவர்கள் பற்றிய முழு விவரங்களையும் அறிய முடியாத நிலை இருந்ததாகவும், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் படகில் வந்தவர்களில் 103 பேர் மியன்மாரில் இருந்து வெளிநாடுகளுக்குப் புகலிடம் கோரிப் புறப்பட்ட அகதிகள் எனத் தெரியவருவதாகவும், கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

படகில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 25 சிறுவர்களும் உள்ளனர். கணிசமானவர்கள் நோய்வாய்ப்பட்டும், மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். கடற்படையினருடன் இணைந்து, பொலீஸ் மற்றும் இராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட அகதிகளுக்கு முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினரால் உணவுப் பொருட்கள், உலருணவு மற்றும் நீராகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!