கடலில் நீராடச் சென்ற இருவர் யாழில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவற்குழியைச் சேர்ந்த சிவநேசன் திவ்யன் என்ற 21 வயதானவரும் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தேவன்கருணதாசா யூட் என்ற 36 வயதான நபருமே உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் இருவர் என மூவர் கடற்கரையில் நீராடிய நிலையில் இருவர் அலையில் சிக்கிக் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!