நாடளாவிய ரீதியில் 729 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் விசேட நடவடிக்கையின் போது 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 595 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேடப்படுவோர் பட்டியலில் இருந்த 134 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவதாகவும் இருவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!