வடதாரகைக்குக் காத்திருந்தோர் : குழுதினியில் போய்ச் சேர்ந்தனர்!

நெடுந்தீவுக்கு வடதாரகையில் செல்வதற்காக நேற்று மாலை முதல் காத்திருந்த பயணிகள் அனைவரும், குழுதினியின் உதவியுடன் நேற்றிரவு நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.

வழமையான படகு ஒழுங்கின் படி நேற்று மாலை 04.00 மணிக்கு வடதாரகை படகு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்குப் புறப்படவிருந்த நேரத்தில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், நேற்று மாலை, நெடுந்தீவுக்கான மாலை நேரப் பயணத்துக்காக வந்த சுமார் 60 பயணிகள் குறிகட்டுவான் கரையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. துறைமுகப் பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் , நோயாளர்கள் உட்படப் பலர் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

பழுதடைந்த படகில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதனால் மாற்றுப் படகு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. முன்னிரவு வரை திருத்த வேலைகள் பலனளிக்காத காரணத்தினால், நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

குழுதினிப் படகில் பயணம் மேற்கொண்ட பயணிகள் இரவு 08.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!