வவுனியாவில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – நோயாளர்கள் அவதி!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாதாரப் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளர்களும், பொதுமக்களும் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரத்த மாதிரிகளை பெறுதல் மற்றும் இரத்த பரிசோதனைகள் என்பனவும் இன்று மேற்கொள்ளப்படாமையினால் பல நோயாளர்கள் திரும்பிச் சென்றுள்ளதோடு, மருந்துகளை பெறுவதிலும் பலர் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!