இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு லட்சம் முட்டைகள் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளன. கேக் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருள்களுக்காக இவை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டதை அடுத்து, முதற் கட்டமாக 20 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பரிசீலனைகளின் பின்னர் அவை சந்தைக்கு விடுவிக்கப்பட உள்ளன. இந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி தொழில்சார் பொருட்களுக்கு மானிய விலையில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.