சமன் பெரேரா உட்பட 05 பேர் கொலை சம்பவம்-இருவர் கைது!

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேரைக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது கடற்படையில் ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி பெலியத்த பிரதேசத்தில் வைத்து ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேவேளை அவர் கடற்படையில் சில காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாயான இந்தக் கொலையின் பிரதான துப்பாக்கிதாரியின் 39 வயது மனைவி மற்றும் இதற்கு ஆதரவளித்த 72 வயதுடைய தந்தையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள் இருவரும் 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதகம, முத்தரகம பகுதியில் மறைத்திருந்த போதே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!