ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் விசேட உத்தரவின் பேரில் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
நாளை, 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும், எதிர்வரும் 8ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட இருக்கும் நடாளுமன்ற அமர்வின் நிகழ்வுகள் தொடர்பாகக் கலந்துரையாடப் படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.