கெகலியவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு போராட்டம்!

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து திரட்டும் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!