பொலீசாரின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நவீன கண்காணிப்பு கமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் பொலீஸ் திணைக்களத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த இரு வாகனங்களும் பொலீஸ் தலைமையகத்தில் வைத்து பொலீஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாபிக்கப்ப்ட்ட பொலீஸ் சி.சி.ரி.வி கண்காணிப்பு பிரிவு, இரண்டு கமரா பொருத்தப்பட்ட வாகனங்களுடன் இயங்கி வந்தது. அவற்றில் ஒரு வாகனம் மேலதிக தொழில்நுட்ப வசதிகளுடன்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில் இரண்டாவது வாகனமொன்றும் மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
பொலீஸ் சி.சி.ரி.வி கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இந்த வாகனங்களும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறப்புப் பாதுகாப்பு திட்டங்கள், மத மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தேசிய, சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், போக்குவரத்து தரவு சேகரிப்பு மற்றும் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களைக் கண்காணிப்பதற்கும் அவை பயன்படுத்தப்படும் என்றும் பொலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
