குழிக்குள் விழுந்து 2 வயது ஆண் குழந்தை

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நேற்று 20ஆம் திகதி காலை வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தேகம, தம்முன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய ஆண் குழந்தையாகும்.

சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!