உயிரை மாய்த்துக்கொண்ட சந்தேகநபர்

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

16 வயதுடைய சிறுமி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று 14ஆம் திகதி இரவு கொலை செய்த 27 வயதுடைய சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டிருந்தனர்.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்வதற்கு கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபர் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலையில் தொழில் புரிந்த குறித்த இளைஞர் நேற்றிரவு வீடு திரும்பியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!