பிக்கு ஒருவரைத் திட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில், பொது இடத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவர் வத்தளைப் பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பிக்குவை திட்டி மிரட்டும் சம்பவம் தொடர்பான காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இச் சம்பவமானது நேற்று 2ஆம் திகதி இரவு வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ரத்னாவலி ஆராமய அருகில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 67 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,
இன்று 3ஆம் திகதி வெலிசறை நீதவான் நீதிமன்றில் அவர்கள் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.
