அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் அதிபர்கள்!

“தமக்கு உரிய தீர்வினை வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத்  தீர்மானித்துள்ளதாக” அதிபர்கள் சேவை சங்கத்தின் தலைவர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”புதிய சேவை யாப்பு காரணமாக அதிபர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக பதவி உயர்வு மற்றும் சம்பளத்தை இழந்தவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான அவதானத்தை செலுத்துமாறு கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம்.

அதற்கு அமைச்சரவை பத்திரம் மூலம் இதற்கு தீர்வு காண்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த வாரம் நடைபெறவுள்ள  அமைச்சரவை கூட்டத்தில் எமது பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்கப்படாவின் அதிபர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!