முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரை வாக்குமூலம் அளிக்க வருமாறு பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வலி. வடக்கு, தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பங்குபற்றியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
பலாலி பொலிஸ் நிலையத்துக்கு நாளை நண்பகல் 12 மணிக்கு இருவரையும் பொலீஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.