இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகத்தான வரவேற்பளித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற அனுரகுமார திசாநாயகா தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக நேற்று இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அவரை இன்று காலை டில்லியில் அமைந்துள்ள இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக நாளை 17 ஆம் திகதி வரை இந்தியாவில் பலரைச் சந்திக்கவிருக்கிறார்.
இன்று காலை, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதிக்குச் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. முப்படையினரின் அணுவகுப்பு மரியாதையுடன், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் அமைச்சர்கள் இலங்கை ஜனாதிபதியைக் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.
நிகழ்வின் நேரலை :
