இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக இந்த சந்திப்பு அமைந்திருந்தது.
இதன்போது, பல்வேறு அபிவிருத்தி நிலைகளில் உள்ள பல இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் பி.டபிள்யூ.ஜி.சி. சாகரிகா போகஹவத்த, மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு பணிப்பாளர் நாயகம் நிலுக கதுருகமுவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.