நாடளாவிய ரீதியில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் அனைத்து கதிரியக்க சிகிச்சை பிரிவுகளிலும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிய சங்கத்தின் பொதுச் செயலாளர் தர்மகீர்த்தி இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!