உயர்தரப் பரீட்சைகளின் செய்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகள் இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நடனம், இசை, நாடகம் மற்றும் நாடகம் ஆகிய பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் முதற்கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் கடந்த 31ம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!