சமூக மற்றும் சுற்றாடல் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த தூய்மையான நாட்டை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 9:00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
“க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத் திட்டத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.cleansrilanka.gov.lk இந்த நிகழ்வில் அங்குரார்ப்பணம் செய்து வைவக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
புதிய வருடத்தில், புதிய பரிணாமத்துக்குச் செல்ல வேண்டிய சலால் அரசாங்கத்துக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச்த சவாலை நிறைவேற்றுவதற்கு முழு அரசியல் அதிகாரமும் துணை நிற்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி, புதிய அரசியல் கலாசாரத்துடன் புத்தாண்டு ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும், இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாக நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கு அரசியல் அதிகாரத்தின் தலையீடும் முன்னுதாரணமும் மாத்திரம் போதாது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அரச நிறுவனங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சரியாக புரிந்து கொண்டு அதற்கான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.