குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சிவப்பு அறிவிப்புக்களை வெளியிட்ட சந்தேக நபர்கள் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று காலை போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த சாலிந்துவின் பிரதான சீடனிடமும் விசாரணை நடத்தப்பட்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக்க என்ற ஹரக் கட்டாவிற்கு துணையாக இருந்த பொலிஸ் அதிகாரியும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!