ஆசிரிய நியமனம் குறித்து விசேட அறிவிப்பு

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பௌதிகவியல், இரசாணயவியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு மொழிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, 22,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், 13,500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான பணிகளை அனைத்து மாகாண சபைகளும் செய்துள்ளதாகவும், ஆனால் தற்போது நீதி விசாரணைகள் நடைபெறுவதால், இந்த விடயம் தாமதமாகியுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு இன்று கிடைக்கப்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!