பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் களையிழந்தது பொங்கல் கொண்டாட்டம்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விற்பனை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்தமையாலும், மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல்  கொண்டாட்டம் மற்றும் பொங்கல்  வியாபாரம் களையிழந்து காணப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றமையையே அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஒரு சில கடைகளில் மாத்திரம் கரும்புகளையும் பொங்கல் விற்பனை பொருட்களையும் காணக்கூடியதாக உள்ள போதும் அந்த கடைகளும் மக்கள் வரவில்லாமல் வெறிச்சோடிப்போய் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!