மத்திய கிழக்கில் எழுந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்நோக்கியுள்ள இடர்கால நிலைமையை எதிர்கொள்ளத்தக்க வகையில் அரச அலுவலகங்களை அனைத்தையும் புதன்கிழமைகளில் பூட்டி, விசேட விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள் ளது.
இந்த அறிவித்தல் இன்று மாலை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டது.
இந்தப் பிரகடனத்தின் கீழ் நாளை மறுதினம் 18 ஆம் திகதி புதன்கிழமை முதல் நாட்டிலுள்ள அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நீதிச் சேவை அடங்கலாக
அரச திணைக்களங்கள், அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் நீதி மன்றங்கள் உட்பட அத்தியாவசிய சேவையினுள் உள்ளடக்கப்படாத அரச நிறுவனங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை புதன்கிழமைகள் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார சேவைகள், நீர் வழங்கல் மற்றும் துறைமுக சேவைகள் உட்பட அதி அத்தியாவசிய சேவைகளுக்கு விசேட விடுமுறை நாள் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எரிபொருள் நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் அரசாங்க நிகழ்வுகள் அனைத்தும் அன்று அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாகவும் அத்தி யாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியார் துறையினரையும் இந்த ஏற்பாடு குறித்துப் பரிசீலனை செய்யுமாறு
