மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் நேற்று 25ஆம் திகதி பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வெலிகம, வலான பிரதேச வைத்தியசாலையின் 49 வயதான தலைமை வைத்திய அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கிய அவரைப் பிரதேசவாசிகள் மீட்டு மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.
