இந்தியாவில் இருந்து நாடு கடத்தபட்ட இலங்கையர்கள்!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த மூவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் குறித்த 3 பேரும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மண்ணடியில் தங்கி இருந்த இசைவேந்தன், யோகராசா, சுஜீவனை நேற்று  பொலிஸார் கைது செய்துள்ளதோடு, அவர்களிடம் இந்தியாவில் வந்து தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பதும் தெரியவந்ததுள்ளது.

இந்நிலையில் அவர்கள் மூவர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்  தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!