ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதால் அவரது பொறுப்பிலிருந்த நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் இயங்கும் டிஜிற்றல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அந்தப் பயணத்தில் இணைந்துள்ள அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்குமே பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, டிஜிற்றல் பொருளாதார பதில் அமைச்சராக டிஜிற்றல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, பாதுகாப்பு பதில் அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருன் ஹேமசந்திர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
