யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது!
பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென கஞ்சா கலந்த மாவா போதைப் பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்று யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாவா பாக்கு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக வண்ணார் பன்னை சிவன் கோயில் பின் வீதியான மானிப்பாய் வீதிக்கு அன்மித்த பகுதியில் உள்ள வீடொன்றே சுற்றிவளைக்கப்பட்டது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மாவா பாக்கு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்ப்பானம் போதை ஒழிப்பு பிரிவும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட வேளை கஞ்சா கலந்த நாலேகால் கிலோ மாவா பாக்கு, பன்னிரண்டரைக் கிலோ பீடித்தூள் மற்றும் 24 ரின்களில் வாசனை திரவியம் போன்ற பொருட்கள் கைப்பற்றபட்டன.
யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரனையை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
