உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வருமதியாகவுள்ள முழு வரி வருமானத்தையும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இவ்வருடத்திற்கான இலக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான உத்திகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
வசூலிக்கப்படாத – வரி ஏய்ப்புச் செய்வோரிடமிருந்து வரி வருவாமனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது நடைமுறையில் உள்ள பொறிமுறைகளை விட தலையீட்டு அணுகுமுறையின் அவசியம் பற்றி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விளக்கினார்.