இலங்கையின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று உத்தியோக பூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
புதிதாகப் பதவியேற்றுள்ள இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோவும், இலங்கைக் கடற்படையின் 26வது கடற்படை தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ் எட்மிரல் காஞ்சன பானகொடவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று உத்தியோக பூர்வமாகச் சந்தித்தனர்.
இரண்டு தளபதிகளும் நியமனம் பெற்றதன் பின்னர் பிரதமரை இன்று முதன் முதலாகச் சந்தித்துள்ளனர். இதன் போது தளபதிகள் இருவரும் உத்தியோகபூர்வ மரியாதையை வழங்கிய அதே நேரம், இருவருக்கும பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, பிரதமரின் செயலாலளர் பிரதீப் சப்புஹந்திரியும் பங்கேற்றிருந்தார்.