லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை நடத்திய குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிராக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு சட்ட நடவடிக்கையைத் தொடங்க உள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த, கடந்த 2021 ஆம் ஆண்டு வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் பலவந்தமாக நுழைந்து பல கைதிகளை மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் இச் சம்பவங்களை விசாரிக்கவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும் அரசாங்கம் குழுவொன்றை நியமித்த நிலையில் அக்குழு லொஹான் ரத்வத்த குற்றங்களைச் செய்துள்ளார் என தெரிவித்திருந்தது.

மேலும் அவர் மீது பி ரிப்போர்ட் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸிற்கு பரிந்துரை செய்தும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறிய பொலிஸாருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!