குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையானார் கெஹலிய!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று காலை குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்.

கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணை மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டதன் காரணமாக நேற்றையதினம் ஆஜராகத் தவறியிருந்தார்.

இதனால், வாக்குமூலத்தை வழங்குவதற்கு வேறொரு திகதியை அறிவிக்குமாறும் கெஹலிய ரம்புக்வெல்ல சிஐடியிடம் எழுத்து மூலம் கோரியிருந்தார்.

தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக வெளிநாட்டு பயணத்தடையும் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!