மன்னார் தோட்டக்காடு பகுதியில் புகையிரதக் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சடலம் இன்று திங்கட்கிழமை, அதிகாலை 4.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதி இந்தப் பெண் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
