நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில், நான்கு நாள்களும் காலை 10:00 மணி முதல், இரவு 07:00 மணி வரை இப் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட முடியும்.
புகைப்பட ஊடகவியலில் சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள் உட்பட, புகைப்படத்தினூடு கதை சொல்லும் பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புகைப்படக் கண்காட்சியின் திறப்பு நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 10:30 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

