வேட்பு மனுக் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு யாழ். மாவட்டத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி கட்சிப் பணம் செலுத்தியுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று காலை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி நடராஜர் காணடீபன் தலைமையிலான குழுவினர் யாழ். மாவட்டத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தைச் செலுத்தினர்.