உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் ஆர்வத்துடன் வேட்பு மனுக்களைச் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று, 18 ஆம் திகதி, புதன்கிழமை,காலை 8.30 மணி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
