வயல்களில் தேங்கியுள்ள மேலதிக நீர் காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதால், தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து வயல்களில் இருந்து நீர் வழிந்தோட வகைசெய்யுமாறு கோரி விவசாயிகள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, வரணி, நாவற்காடு கிராம விவசாயிகளே இன்று நீர் நிறைந்த வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதால் தாம் விரக்தியடைந்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.